டெல்லி: இந்தியாவில் இன்று 3வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில்   9,531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட உள்ளதுடன், தற்போது சிகிச்சையில் 97,648 பேர் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக 9,531 பேர் பாதித்துள்ளனர்.  கடந்த 19-ந்தேதி பாதிப்பு 15,754 ஆக இருந்தது. 20ந்தேதி அன்று  13,272 ஆகவும், 21ந்தேதி  11,539 ஆகவும் குறைந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது.  நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960 ஆக உயர்ந்தது.

நேற்று கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில்,  11,726 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.59% ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பலன்றி கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,27,368 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.

தற்போது 97,648 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,231 குறைவு ஆகும். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,10,02,40,361  கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 35,33,466  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.