டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 21,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 1,49,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர பாதிப்பு குறித்து,  வெளியிட்ட தகவலின்படி, புதிதாக மேலும்,  21,880 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 20,557 ஆகவும், நேற்று 21,566 ஆகவும் இருந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 38 லட்சத்து 47 ஆயிரத்து 65 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும்  60 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 22 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை, 5,25,930 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24மணி நேரத்தில் மேலும்,  21,219 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.46% ஆக உயர்ந்துள்ளது

தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 601 உயர்ந்தது 1,49,482 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.34% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 201 கோடியே 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று 4,95,359 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த பரிசோதனை எண்ணிக்கை 87.16 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.