சென்னை: தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக மேலும், 30,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 21 நாட்களாக கொரோனா தொற்று ஏறுமுகமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை  இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநிலம் முழுவதும் இதுவரை 6,04,45,762 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,55,648 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும்  30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 31,03,410ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 1ம் தேதி கொரோனா புதிய பாதிப்பு  1,489ஆக இருந்த நிலையில், இன்று 30,718 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று மேலும்,  33 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 37,178ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து,  23,372 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை  குணமடைந்தோர்  எண்ணிக்கை 28,71,535ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 1,94,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில்  6,452***  பேரும், கோவையில் 3,886  பேரும், செங்கல்பட்டில்  2,377 பேரும், கன்னியாகுமரியில் 1,266 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர்163
செங்கல்பட்டு2377
சென்னை6452
கோவை 3886
கடலூர்587
தர்மபுரி397
திண்டுக்கல்166
ஈரோடு1066
கள்ளக்குறிச்சி231
காஞ்சிபுரம்700
கன்னியாகுமரி1266
கரூர்207
கிருஷ்ணகிரி878
மதுரை565
மயிலாடுதுறை168
நாகப்பட்டினம்218
நாமக்கல்704
நீலகிரி301
பெரம்பலூர்113
புதுக்கோட்டை244
ராமநாதபுரம்229
ராணிப்பேட்டை484
சேலம்1080
சிவகங்கை 124
தென்காசி 250
தஞ்சாவூர் 840
தேனி477
திருப்பத்தூர்434
திருவள்ளூர்1069
திருவண்ணாமலை592
திருவாரூர்342
தூத்துக்குடி 351
திருநெல்வேலி 828
திருப்பூர் 1014
திருச்சி705
வேலூர் 196
விழுப்புரம் 511
விருதுநகர்529