சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 455 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,66,862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 7,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,22,497 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 17,043 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,21,928 ஆக உள்ளது.
நேற்று மட்டும் 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 31,197 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இ நேற்று 455 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மொத்த பாதிப்பு சென்னையில் 5,29,211 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில்,.சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,316 ஆக உள்ளது. அதேவேளையில் நேற்று மட்டும்14 பேர் உயிர் இழந்துள்ளார். அதன் காரணமாக சென்னையில் இதுவரை 8,046 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று மட்டும் 1,375 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,19,849 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 904 பேருக்கும், ஈரோட்டில் 870 பேருக்கும், சேலத்தில் 517 பேருக்கும், சென்னையில் 455 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்: