சென்னை:  தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழுவில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.

‘தமிழக சட்டமன்றப் பேரவையின் 16வது பேரவையின் முதல்கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி னார். காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் புரோகித். தமிழ் இனிமையான மொழி என்றும் ஆளுநர் புரோகித் புகழாரம் அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையாற்றினார்.

இதையடுத்து, சபையை எத்தனை நாள் நடத்துவது என்பதுகுறித்து,  சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன்படி வரும் 24ந்தேதி வரை சபை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு  அறிவித்தார்.அன்றைய தினம் (24ம் தேத)  கவர்னர் உரைக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலுரை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.