தமிழ்நாடு முழுவதும் இன்று 20வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்…

Must read

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 20வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தவறாமல் எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.   அதன்படி, வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி முகாம்களும், ,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது.

இன்று  20 வது தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் சுமார்  50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசி முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே,அருகில் உள்ள தடுப்பூசி முகாம் மையங்களுக்கு சென்று தங்களுக்குரிய முதல் தவணை அல்லது இரண்டாவது தவணையை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளுமாறு மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளர்கள்.

More articles

Latest article