Month: January 2021

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பாரதீய ஜனதாவினர்!

ஜலந்தர்: மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாபின் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த விவசாயிகளே கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது கவனத்தைக் கவர்ந்துள்ளது. அத்தொகுதியில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற சோம்…

சசிதரூர் & ஊடகவியலாளர்கள் மீது 5 மாநிலங்களில் வழக்குப்பதிவு!

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சசிதரூர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள், மொத்தம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளன. குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டது. விவசாயி ஒருவர் பலியானார். அந்த நிகழ்வு குறித்து…

நிதிஷ் கட்சி கடும் எதிர்ப்பு – என்டிஏ கூட்டத்தைப் புறக்கணித்த சிராக் பஸ்வான்!

பாட்னா: ஐக்கிய ஜனதாதள எதிர்ப்பினால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து, எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் பின்வாங்க நேர்ந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், ஆன்லைன் முறையில் நடைபெற்றது.…

சீன அடக்குமுறை? – ஹாங்காங்கை விட்டு கொத்துகொத்தாக வெளியேறும் மக்கள்!

ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள சுயாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கில், சீன அரசின் அடக்குமுறை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் வெளியேறி, பிரிட்டனில் தஞ்சமடைந்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், நீண்டகாலம் பிரிட்டனின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த ஹாங்காங், கடந்த 1997ம் ஆண்டு…

விஷாலின் ‘சக்ரா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…!

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு…

விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்த பஞ்சாப் கிராமங்கள் மேற்கொள்ளும் அதிரடி முடிவு!

சண்டிகர்: மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் நடைபெற்றுவரும் தங்களின் போராட்டத்தை வலிமைப்படுத்தும் விதமாக, பஞ்சாப் கிராம சபைகள், தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தற்போதைய நிலையில், போராடும் விவசாயிகளின் எண்ணிக்கையில் பெரியளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், குடியரசு தின…

உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தை நசுக்கும் வகையிலான மோடி அரசின் நடவடிக்கை!

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆன்லைன் முறையிலான சர்வதேச மாநாடுகளை நாட்டின் அரசுப் பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டுமென்றால், மத்திய அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டுமென்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தில்…

சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று…

பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் சசிதரன் காலமானார்….!

தமிழகத்தில் பேஸ் கிட்டார் இசையை பிரபலத்தி ஒட்டுமொத்த இசையுலகிற்கும் பெருமை சேர்த்த இசை கலைஞர் சசிதரன் காலமானார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவியின் உடன் பிறந்த சகோதரர் தான் சசிதரன். சினிமா பிரபலங்கள், இசை ரசிகர்கள் என பலரும் பேஸ் கிட்டாரிஸ்ட் கலைஞர்…

ரஷியாவில் பேருந்தும், லாரியும் மோதி கோர விபத்து: 12 போ் உடல்சிதறி பலி

மாஸ்கோ: ரஷியாவில் பேருந்துடன் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். அந் நாட்டின் மத்தியில் உள்ள சமாரா மாகாணத்தின் சிஸ்ரான் என்ற பகுயில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே…