2019 உலககோப்பை கிரிக்கெட்: ஜூன் 16ல் இந்தியா-பாகிஸ்தான் போட்டி

Must read

கொல்கத்தா:

2019-ம் உலககோப்பை கிரிக்கெட்டில் ஜூன் 16ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை நடக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கும் உலககோப்பை அட்டவணை இன்று வெளியானது.

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து- தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. ஜூன் 16-ம் தேதி மான்செஸ்டரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

More articles

Latest article