ஐபிஎல் தொடரில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜன் பர்பிள் கேப்-பை பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தியதை அடுத்து ஊதா கேப் அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் அந்த கேப்பை தனது மகளுக்கு அணிவித்து மகிழ்ந்தார் நடராஜன்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊதா கேப்-பை பெற 2024 ஐபிஎல் சீசனின் இரண்டாவது பாதியில் பந்துவீச்சாளர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

எகனாமி ரேட் விகிதத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்ற இருவரை விட சிறப்பாக இருப்பதால் அவர் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டி-20 உலகக்கோப்பை போட்டித் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை என்ற போதும் அவரது பந்துவீச்சு மற்ற வீரர்களுக்கு சவால் விடும்வகையில் அமைந்துள்ளது.