2015 இல் சென்னை நகரம் பெரு மழையால் தத்தளித்தது! அப்போது, திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றி நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது!

இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின! மக்கள் வீடிழந்தது மட்டுமின்றி தங்கள் உடைமைகளையும் இழந்தனர்!

இவற்றுக்கு மேலாக.. சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்து போன கொடுமையும் நடந்தது!

அன்றைய முதலமைச்சரின் அலட்சியம்.. நிர்வாகத் திறனின்மை காரணமாகத்தான் இந்த அநியாயங்கள் நடந்தன!

பின்னர் ஜெ. மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்பேற்ற எடப்பாடி யும் அவரது அமைச்சர்களும் கவலையே படாமல் ஊழல் களில் திளைத்து நிர்வாகத்தைக் கோட்டை விட்டனர்!

அப்போது சென்னைக்கு “ஸ்மார்ட் சிட்டி” திட்டம் வகுக்கப்பட்டு, அதற்காக சில ஆயிரங்கோடிகள் ஒதுக்கப்பட்டன!

ஆனால், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் சேர்ந்து “பெரும் முறைகேடுகள்” செய்ததால், கால்வாய், தூர்வாரும் பணிகள் அரைகுறையாக…முறையற்றதாக நடந்தன!

ஆனால், கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அன்றைய முதல்வர் எடப்பாடி, ” இனி சென்னையில் மழை பெய்தாலும், வெள்ளம் சூழாது.. ஏனென்றால், 1000 கோடி ரூபாயில் பல நீர் மேலாண்மைத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்” என்று உரக்க முழங்கினார்!

இப்போது அவரது பேச்சின் உண்மைத் தன்மையை சென்னை நகர மக்கள் நிதர்சனமாகக் காண்கிறார்கள்!

ஆனால், இன்று ஓ. பி. எஸ். உள்ளிட்ட அ. தி. மு.க.
அமைச்சர்களின் ‘காமெடி அலப்பறைகளைக் கேட்கும் சென்னை மக்களின் ‘ரீயாக்சன்’ இதுதான்!

** ஓவியர் இரா. பாரி.