15/11/2021 7.30 PM: சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – விவரம்…

Must read

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 802  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,01,070 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 5,27,47,257** சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 802 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,15,632 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 12 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனா வால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,296 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்று மேலும் 918 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,69,848 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 9,488 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் தொடர்கிறது.அங்கு இன்று 123 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 122 பேருக்கும், ஈரோட்டில் 77 பேருக்கும், செங்கல்பட்டில் 62 பேருக்கும் திருப்பூரில் 49 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 122  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,56,408 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 4 பேர் பலியாகி உள்ளதுடன் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8578 ஆக அதிகரிததுள்ளது.. இன்று மட்டும் 98 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,46,575 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் மட்டும்  1255 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 2
செங்கல்பட்டு 62
சென்னை 122
கோவை 123
கடலூர் 10
தர்மபுரி 17
திண்டுக்கல் 6
ஈரோடு 77
கள்ளக்குறிச்சி 9
காஞ்சிபுரம் 18
கன்னியாகுமரி 13
கரூர் 13
கிருஷ்ணகிரி 7
மதுரை 13
மயிலாடுதுறை 1
நாகப்பட்டினம் 5
நாமக்கல் 35
நீலகிரி 21
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 6
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 1
சேலம் 39
சிவகங்கை 7
தென்காசி 0
தஞ்சாவூர் 27
தேனி 3
திருப்பத்தூர் 1
திருவள்ளூர் 27
திருவண்ணாமலை 5
திருவாரூர் 17
தூத்துக்குடி 6
திருநெல்வேலி 8
திருப்பூர் 49
திருச்சி 37
வேலூர் 7
விழுப்புரம் 3
விருதுநகர் 1

More articles

Latest article