கோபே,
ப்பானுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்ற மோடி, அங்குள்ள இந்தியர்களிடையே பேசினார். அப்போது இன்னும் 2 மாததில், தற்போது வெளியிட்டுள்ள ரூ.2000 நோட்டுக்கள் கூட செல்லாமல் போகலாம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளார்.
modi-japan
மூன்று நாள் பயணமாக ஜப்பானுக்கு சென்ற மோடி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்று, அங்கு அந்நாட்டு மன்னர் அகிகிடோ, பிரதமர் ஷிண்டோ அபே ஆகியோரை முதலில் சந்தித்து பேசினார்.
அப்போது  இருநாடுகளுக்கு இடையே  வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர்  அந்நாட்டுப் பிரதமர் அபேவுடன் புகழ்பெற்ற ஷிண்கன்சென் புல்லட் ரயில் மூலம் கோபே நகருக்கு சென்று,  அங்குள்ள கவாஸகி ரயில் தொழிற்சாலையை பார்வையிட்டார்.
அதைதொடர்ந்து,  ஜப்பான் கோபே நகரில், ஜப்பானில் வாழும் இந்தியர்களிடையே உரையாற்றினார்.
அப்போது கூறியதாவது,
”இந்தியாவில் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை (ரூ.500, 1000 செல்லாது)  நாட்டை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று. இது  யாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை அல்ல.
சில குடும்பங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிலர் மருத்துவமனைகளுக்கு சென்று வரவேண்டிய கட்டாயம் உள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கெல்லாம் மிகுந்த சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அவர்கள் எனது முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்றார்.
மேலும்,  இதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பதுக்குவதற்கு எளிதாக இருக்கும் என்றும் இதனால் எதிர்காலத்திலும் கருப்புபண பிரச்சனை தொடரும் எனஎதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால்,  “டிசம்பர் 30 ஆம்தேதிக்கு பிறகு மீண்டும் இதேபோன்ற  ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என உறுதியாக சொல்லமுடியாது”  என்று கூறினார்.