தனியொருவன்: அரசுக்கு நெருக்கடியை உணர்த்த டிக்கெட் எடுக்காமல் பயணம்!

Must read

நெட்டிசன்:
 நீரை. மகேந்திரன் அவர்களின் முகநூல் பதிவு:
யணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அரசுக்கு என் நெருக்கடியையும் உணர்த்துகிறேன்.
இன்று திட்டமிட்ட இரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க போதிய பணமில்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என நேற்றே முயற்சித்தாலும் காத்திருப்போர் பட்டியல் 50க்கு மேல் இருந்தது. எனவே பயணச் சீட்டு எடுக்காமல் பயணிப்பது என முடிவெடுத்தேன்.

நீரை. மகேந்திரன்
நீரை. மகேந்திரன்

இன்று அதிகாலையிலேயே பேருந்துக்கு நிற்கும் நேரத்தில் ஒரு ஆட்டோ வந்தது. எங்க சார் போகனும் என்றார் ஆட்டோகாரர். சென்ட்ரல் போகனும், கையில் 10 ரூபாய்தான் இருக்கு நீங்க போங்கண்ணே என்றேன். பரவாயில்லை வாங்க, யார் கையிலும் பணமில்லை, நானும் அங்கேதான் போறேன் என ஏற்றிக் கொண்டார்.
ரயிலில் பரிசோதகர் வந்தார். ஏ டி எம் களில் பணமில்லை, அதனால் பயணச்சீட்டு எடுக்கவில்லை, இது என் பிரச்சினை அல்ல, அரசு உருவாக்கிய பிரச்சினை அதனால் அபராதமும் கட்ட முடியாது, இல்ல சட்டபடிதான் நடந்துக்க வேணும் என்றால் என் ஏடிஎம் கார்டை தருகிறேன். அபராதம் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதா என அவருடன் வாதம் செய்ததில், உட்காருங்க சார் என்றார்.
இது அரசு உருவாக்கிய நெருக்கடி. சிரமத்தை பொறுத்துக் கொள்ள சொல்லும் அரசுக்கு, அதனால் உருவாகும் நெருக்கடிகளை உணர்த்த வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. 2000 ரூபாய் நோட்டை பார்த்ததும் பல்லிளித்துக் கொண்டு செல்பி எடுக்கும் கேவலமும், 4000 ரூபாய்க்காக ஒரு நாள் முழுக்க காத்திருக்கும் மங்குனித்தனமும் நிறைந்திருக்கும் வரை அரசுகளுக்கு மக்களின் நெருக்கடிகளை உணரப்போவதில்லை.
தனியொருவன்!”
 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article