டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 1,01,166 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 4.21% ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று காலை 8மணி வரையிலான கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24ம ணி நேரத்தில் புதிதாக மேலும் 13,272 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,43,27,890 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 1,01,166 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி பாதிப்பு 4.21% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,900 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,36,99,435 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,289 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,09,40,48,140 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,15,536 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,15,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,21,88,283 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.