சென்னை: 2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி கிடையாது, இனி பிஎட் படிப்புகள் 4 ஆண்டுகள் என  என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்து உள்ளது.

பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் குறிப் பிட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப் பதுடன் பி.எட். எனப்படும் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற வேண்டும். இதுவரையில் பிஎட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்து வந்தது. பின்னர்,   நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அமைப்பானது பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த் தப்படும் என்று கடந்த 2014ம் ஆண்டு அறிவித்து, 2015ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றுமுதல் இதுவரை பிஎட் படிப்பு 2 ஆண்டுகளாக இருந்து வருகறது. அதாவது, 2015-2016-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரி களிலும் நடை முறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்படி, நடப்பாண்டு முதல் பிஎட் படிப்பு 4 ஆண்டு படிப்பாக உயர்த்தப்பட்டு உள்ளது.

புதிய தேசிய கல்வி 2020ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்து உள்ளது.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) 2 ஆண்டு சிறப்பு B.Ed படிப்பை நிறுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் படிப்புகள். 2024-2025 கல்வி அமர்வு தொடங்கி, 4 ஆண்டு சிறப்பு பி.எட். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் விதிகளின்படி இந்தப் படிப்புகள் அங்கீகரிக்கப்படும் என அறிவித்து உள்ளது.

இந்த பாடநெறி கற்பித்தல் முறைகள் பற்றிய பரந்த மற்றும் ஆழமான புரிதலை வழங்குகிறது. கற்பித்தல் அடித்தளத்தை வலுப்படுத்துதல் : இது கல்வி ஆராய்ச்சி, குழந்தை உளவியல் மற்றும் கல்வித் தொழில்நுட்பம் உள்ளிட்ட கல்வியியல் மற்றும் தொடர்புடைய பாடங்களில் ஆசிரியர்களுக்கு வலுவான அடித்தளத்தை அளிக்கிறது.

மேலும்,  கல்வி ஆராய்ச்சி, குழந்தை உளவியல், கல்வி தொழில்நுட்பம் மற்றும் பிற தொடர்புடைய பாடங்களில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.  நீட்டிக்கப்பட்ட பாடநெறி காலம் மாணவர்களுக்கு சிறந்த அறிவை வழங்க ஆசிரியர்களுக்கு உதவுகிறது என்றும்,  4 ஆண்டு பி.எட். கல்வியியல் பற்றிய பரந்த புரிதல், கல்விப் பாடங்களில் வலுவான அடித்தளம், மேம்பட்ட கற்பித்தல் திறன் மற்றும் கல்வி ஆராய்ச்சி, குழந்தை உளவியல் மற்றும் கல்வித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மேம்பட்ட நிபுணத்துவம் உள்ளிட்ட பல நன்மைகளை இந்தப் பாடநெறி வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.