2 மத்திய இணை அமைச்சர்கள் ராஜினாமா

Must read

டில்லி:

2 மத்திய இணை அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

மத்திய அமைச்சரவை மாற்றப்படலாம் எனவும், விரிவாக்ககம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ராஷ்ட்ரீயன ஜனதா தளம் மற்றும் அதிமுக கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ராஜிவ் பிரதாப் ரூடி

 

இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மகேந்திரநாத் பாண்டே

 

இருவரும் கட்சி பணிக்கு செல்கின்றனர். இருவரின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது

More articles

Latest article