டில்லி:

யிரை கொல்லும் புளுவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

உலகம் முழுவதும் குழந்தைகள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரை எடுக்கும் கொடூர விளையாட்டான புளுவேல் விளையாட்டு காரணமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ‘புளுவேல்’ விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‛புளுவேல்’ கொடூர விளையாட்டு மாணவர்களின் தற்கொலையை தூண்டுகிறது. ஆசிரியர்கள்  மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால், அவர்களது பெற்றோரை அழைத்துப் பேச ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

தேவைபடுபவர்கள் ‛1098′ என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

இனி ஒரு மாணவர் கூட ‛புளுவேல்’ ஆன்லைன் விளையாட்டுக்கு இரையாகக்கூடாது.

இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.

இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில்,  கம்ப்யூட்டர், மொபைல் போனுக்கு தடை விதித்து சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,  ‘மொபைல் போன், ஐ பேட், நோட் பேட், லேப்டாப்’ போன்ற எந்தவித மின்னணு பொருளையும், பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது. பள்ளி வாகனங்களிலும் எடுத்து வரக்கூடாது.

இணையதளம் இயக்குதல், கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தகவல்களை பரிமாறும் மற்றும் கையாளும் எந்த பொருளுக்கும், பள்ளிகளில் அனுமதி கிடையாது.

பள்ளிகளில் இணையதளம் மற்றும் கணினி பயன்படுத்துவதாக இருந்தால், அவற்றை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கண்காணிக்கும் வகையில், பரந்துபட்ட இடத்தை ஒதுக்க வேண்டும்

இணையதள பாதுகாப்பை, அனைத்து பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும்.

அனுமதிக்கப்படாத இணைய தளங்களை இயக்க, மாணவர்களுக்கு அனுமதி தரக்கூடாது.

இவ்வாறு  சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.