ராமேஸ்வரம் கடலில் மிதந்தபடி திமுகவுக்கு  வாக்கு சேகரிப்பு…

Must read

ராமேஸ்வரம்: திமுகவுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் பாம்பன் கடலில் மதிமுக தொண்டர்கள் இருவர் கடல்நீரில் மிதந்தபடி உதயசூரியன் சின்னத்துடன் வாக்கு சேகரித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சாவை ஆதரித்து மதிமுக தொண்டர்கள், பாம்பன் கடலில் மிதந்த படி வாக்கு சேகரித்தனர்.

கைகளில் திமுக பதாகைகளை ஏந்தியபடி சுமார் 6 மணி நேரம் அவர்கள்  கடலில் மிதந்து வாக்கு சேகரித்தனர்.  இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More articles

Latest article