சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு செப்டம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் நடை பெற உள்ளது.

இந்த மாநாட்டில் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் தானியங்கி கருவிகளில் தமிழ்மொழி பயன்பாடு என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டுக்குழுக்கள் தொடர்பிலான அறிவிப்புக்களும் கட்டுரை  கோருவது குறித்த அறிவிப்பு களும் விரைவில் அறிவிக்கப்படும் என மாநாட்டுக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

கடந்த 17வது  உலகத் தமிழ் இணைய மாநாடு, அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள் என்ற தலைப்பில்  கோவை வேளாண் பல்கலைக்கழகத் தில்  கடந்த ஆண்டு ஜூலை 6ந்தேதி நடைபெற்றது.  இந்த மாநாட்டில்6 சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான ஆய்வாளர்கள்  கலந்து கொண்டதாகவும்,   பல தலைப்புகளில் வல்லுநர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் 18வது உலக தமிழ் இணைய மாநாடும் தமிழகத்திலேயே நடைபெற உள்ளது.