100 ஆண்டுகளுக்குப் பிறகு பிளாக் பாந்தர் என கருஞ்சிறுத்தை பற்றிய செய்திகள் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  சமூக ஊடகங்களின் கருஞ்சிறுத்தையின் படங்களும் வைரலாகி வருகிறது.

முற்றிலும் அழிந்து போனதாக கூறப்பட்ட பிளாக் பாந்தர் இனத்தில் ஒரு சிறுத்தை, புகைப்பட கலைஞரின் காமிராவில் சிக்கியிருப்பது ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த அரிய கருஞ்சிறுத்தையை படம் எடுத்தவர் பர்ராட்-லூகாஸ் என்ற பிரிட்டிஷ் வனவிலங்கு புகைப்பட கலைஞர். இவர் மத்திய கென்யாவின் காட்டுப்பகுதிகளில் எடுத்த புகைப்படத்தில் இந்த அரிய வகை பிளாக்பாந்தர் சிக்கியுள்ளது.

கென்யாவின்  லோய்ஸபா கன்சர்வன்ஸி வனப்பகுதியில் தனது ஆராய்ச்சிக்காக பல இடங்களில் காமிராக்களை பொருத்தியிருந்த பர்ராட்-லூகாஸ், காமிராவில் எதிர்பாராத விதமாக பிளாக்பந்தர் கருஞ்சிறுத்தை சிக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்கா வனப்பகுதியில் காணப்படும் சாதாரண சிறுத்தை வகை சிரத்தையுடன் இந்த பிளாக் பாந்தர் அந்தப் புகைப்படத்தில் சிக்கியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சிறுத்தைகள் 1909ம் ஆண்டு காணப்பட்டதாகவும், அதன்பிறகு அந்த அரிய வகை இனம் அழிந்து போனதாக கூறப்பட்டது. ஆனால், சுமார் ஒரு தசாப்தத்துக்கு (100 ஆண்டுகள்) பிறகு தற்போது அதன் நடமாட்டம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

1909ம் ஆண்டு, அடிஸ் அபாபா என்கிற புகைப்பட கலைஞர் பிளாக் பாந்தரின் புகைப்படத்தை எத்தியோப்பியா வனப்பகுதியில் கிளிக் செய்திருந்த நிலையில், தற்பொழுது பர்ராட்-லூகாஸ் இந்தப் பெருமையை 100 வருடங்களுக்குப் பிறகு பெறுகிறார்.

பர்ராட்-லூகாஸ் என்ற பிரிட்டிஷ் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்,

இதுகுறித்து கூறிய பர்ராட்-லூகாஸ், வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் சிறுத்தையின் தடங்களை வைத்து, அதுகுறித்து அறிய மறைவான ஒரு இடத்தில் காமிரா பொருத்தி இருந்ததாகவும், வனத்தில் காணப்பட்ட கால் தடங்கள், அது  சாதாரண சிறுத்தையா அல்லது வேறு மிருகமாக என்று தெரியாத நிலையில் ஒரு அனுமானத்தின் அடிப்படையிலேயே தான் காமிராவை பொருத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் எனது நம்பிக்கை வீண் போக வில்லை என்றவர், எனது காமிராவில் கருஞ்சிறுத்தையின் புகைப்படம் கிடைத்திருப்பதை பார்க்கும்போது நான் அதிஷ்டக்காரன் என்று எண்ண தொடங்கி னேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து உள்ளார்.

தன்னுடைய காமிராவில் சிக்கும் விலங்குகள் பொதுவாக தெளிவாக பார்க்க முடியும், ஆனால், இந்த கருஞ்சிருத்தை சிக்கிய நேரம் இரவு நேரம் என்பதாலும்,அதன் நிறம் கறுப்பு என்பதாலும் அதன் கண்கள் புகைப்படத்தில் வெறித்து பார்ப்பதைதான் என்னால் பார்க்க முடிந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.