மாஸ்கோ:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கவாரத தாங்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அதற்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான் உடனடியாக தனது நாட்டில் செயல்பட்டு வரும்  பயங்கரவாத முகாம்களை  மூட வேண்டும் என்று கண்டித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, சவுதி போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

புல்வாமா தாக்குதல்குறித்து,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி உள்ள செய்தியில், இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு எப்போதுமே ரஷ்யா நேசிக்கரம் நீட்டும் நாடாகவே இருந்து வருகிறது. தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  படுகாயமடைந்த வீரர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்றும், இது கொடுமையான குற்றம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் விளாடிமர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தானுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள புதின்,  மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பயங்கரவாத குழுக்களை வேரறுக்க பெரும் மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பயங்கரவாதிகளால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள புதின், எந்தவொரு குழுவும்,  எந்தவொரு நோக்கத்துடனும் மற்றும் எந்தவொரு பெயரிலும் இதுபோன்ற எந்தவொரு  மனிதாபிமானமற்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும்  பயங்கரவாத குழுக்களை உடனடியாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், அமைதி ஏற்படவும்  பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளுக்கு உறுதுணை இருப்போம் சவுதி அரேபியா தெரிவித்து உள்ளது.

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.