சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று 1245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் 167 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில் சென்னை மீண்டும் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 1245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 84 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 33 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 15 ஆயிரத்து 238 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக இருந்த நிலையில் நேற்று 167 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 5,52,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 2 பேர் உயிர் இழந்துள்ளதுடன் இதுவரை 8,519 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் நேற்று 168 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,42,110 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,830 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

[youtube-feed feed=1]