15 ஆண்டுகள் ஆனபின்னும் சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது #15YearsofSivajiTheBoss ஹாஷ்டேக்

Must read

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2007 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிவாஜி’ தி பாஸ்.

2007ஆம் ஆண்டு வெளியான படங்களில் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம், `சிவாஜி: தி பாஸ்’.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருடன் விவேக், ஷ்ரேயா சரண், சுமன், ரகுவரன், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

சிவாஜி தி பாஸ் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மறைந்த நடிகர் விவேக் ஆகியோர் நடித்த காட்சி ஒன்றின் படப்பிடிப்புக் காட்சியை இந்தப் படத்தை தயாரித்த ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சமூக வலைதளத்தில் #15YearsofSivajiTheBoss என்ற ஹாஷ்டாக் வைரலான நிலையில், இந்தப் படத்தின் இயக்குனர் சங்கர் மற்றும் அவரது மகளும் நடிகையுமான அதிதி சங்கர் இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இன்று நேரில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

More articles

Latest article