‘சிவாஜி’ வெளியாகி 15ஆண்டுகள் நிறைவு: நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான இரு வீடியோக்களை வெளியிட்டுள்ளது ஏவிஎம் நிறுவனம்…

Must read

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, சிவாஜி படத்தின் ஷூட்டிங்போது எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்ட இரண்டு வீடியோக்களை, பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான  ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் தனது 71 வயதிலும் கதாநாயகனாக, இளசுகளுடன் துள்ளாட்டம் போட்டு நடித்து வருகிறார். அவரது ஸ்டைலுக்கு இன்றுவரை தனி பட்டாளமே உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.  கடந்த 1975-ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே பாலசந்தரால்,  அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் முதல் காலடி எடுத்து வைத்த ரஜினிகாந்த், இன்று தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, தள்ளாத வயதிலும் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் மிகவும்  எளிமையான  நடிகரான இவரை, ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ எனும் மகுடத்துடன் இப்போது வரை கொண்டாடி வருகின்றனர்.

தமிழக திரையுலக ஜாம்பவனான மறைந்த எம்ஜிஆருக்கு பிறகு, தமிழக மக்களிடையே பெரும் ஆதரவையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். தனது 46 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில், 168க்கு மேற்பட்ட படங்களில் நடித்து இன்றுரை தமிழக உச்ச நட்சத்திரமாக ஒளிர்ந்து வருகிறார்.  ஏராளமான விருதுகளை அள்ளிக்குவித்தவர், நாட்டின் உயர்ந்த திரையுலக விருதான தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார்.

இவர் நடித்த சிவாஜி என்ற மாபெரும் வெற்றிபடத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடக்ஷன்ஸ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2007ம் ஆண்டு தயாரித்தது. இந்த படத்தில் அவருடன்  மணிவண்ணன், வடிவுக்கரசி, விவேக், ஸ்ரேயா, சாலமன் பாப்பையா, சுமன் போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்து வெளியான படம் ‘சிவாஜி’. பாடல்கள் முதல் பின்னணி இசை வரை ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு மிகச் சிறப்பாக பணியாற்றியிருந்தார்.

இந்த படத்தின் கதை வசனம்மட்டுமின்றி பாடல்களும்  மாபெரும் வெற்ற பெற்றன. வெளியிட்ட இடங்களில் எல்லாம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.  இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் தமிழக மக்களிடையே தெவிட்டாத தேனமுதமாக இன்றுவரை வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில்,  சிவாஜி படத்தின் 15 வது ஆண்டு கொண்டாட்டத்தின் அம்சமாக, படத்தின் ஷூட்டிங் காட்சிகள் சிலவற்றை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோக்களை ரஜினியின் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். சமூக இணையதளங்களில் இந்த வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.

More articles

Latest article