டெல்லி: சோனியா, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது, அவர்களை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும், பொதுமக்களின் கோபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக இது போன்ற திசை திருப்பும் யுக்திகளைப் பயன்படுத்துகிறது என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை, சோனியா, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி உள்ளது. சோனியா காந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ராகுல்காந்தி இன்று  3வது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமலாக்கத்துறையின் நடவடிக்கை, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் திருமதி சோனியா காந்தி மற்றும் திரு ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் மூர்க்கத்தனமான செயலை நான் கண்டிக்கிறேன்.

அமலாக்க இயக்குனரகத்தைப் பயன்படுத்தி ஆளும் பாஜக அரசு. சாமானியர்களின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு பதில் இல்லாத நிலையில், பொதுமக்களின் கோபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக இது போன்ற திசை திருப்பும் யுக்திகளைப் பயன்படுத்துகிறது.

அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும், அமலாக்க இயக்குனரகத்தை கட்டாயப்படுத்தி அல்ல.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.