சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வசதி படைத்த ஒரு கட்டுமான நிறுவனத்தின் குடும்பத்தினர் டேராடூன் சென்றுள்ளனர்.

அங்கு ஆண்கள் பெண்கள் என அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியும் இருக்கின்றனர்.

அப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங்காக பணிபுரியும் 24 வயது பெண்ணை ஆரம்பம் முதலே கண்காணித்து வந்திருக்கிறான்.

நேற்று காலையில் ஒன்பது மணிக்கு தன் பணிக்காக ஹோட்டல் அறைக்கு சென்று அங்கு தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு பணியை ஆரம்பித்து இருக்கிறார்.

வாஷ் பேசின் அறைக்குள் அந்தப் பெண் பெண் போன கொஞ்ச நேரத்திலேயே சிறுவனும் பின்தொடர்ந்து போனான்.

அறையின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு அங்கேயே அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தி பலாத்காரமும் செய்துள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண் ஆவேசத்துடன் குடும்பத்தினருடன் முறையிட்டபோது சிறுவனின் குடும்பத்தினர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக சிறுவனின் தந்தையார் ஹோட்டல் ஊழியர் பெண்மணிக்கு ஏராளமான பணத்தை தந்து இந்த விஷயத்தை இத்தோடு விட்டு விடுங்கள் என்று சமரசம் பேசி இருக்கிறார்.

டேராடூனில் தன் கணவரோடு வசித்துவரும் ஹோட்டல் ஊழியர் பெண்ணோ இதற்கு மறுத்து விட்டு போலீசிடம் சென்று புகார் அளித்து விட்டார்.

போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனைப் பிடித்து விட்டனர்.

இமயமலை அடிவாரத்தில் குளுகுளு சுற்றுலாத்தலமான உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில், ஹோட்டலில் தங்கிய 15 வயது சிறுவன் 24 வயது பெண் ஊழியரை பலாத்காரம் செய்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-லதா வெங்கட்