புதுடெல்லி: சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் வெடித்த்தைத் தொடர்ந்து 600க்கும் மேற்பட்டவர்களை சீன வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டிலிருந்து வெளியேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, மாற்று வழிகள் மூலம் இந்தியா வந்து சேர்ந்த பின்னர் அரசாங்கத்திற்கு அறிவிக்கத் தவறிய சிலரை ஹரியானா சுகாதாரத் துறை அடையாளம் கண்டுள்ளது. விசாரித்ததில், மொத்தம் 15 பேர் சீனாவிலிருந்து இந்தியா வந்துள்ளதாகத் தெரிகிறது.

ரோஹ்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் இல் ஒரு நபர் காய்ச்சல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து புகார் அளித்ததையடுத்து இந்த விஷயம் வெளிவந்தது என டைனிக் பாஸ்கரில் வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நுரையீரல் பராமரிப்புத் துறையின் மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

மேலும் சீனாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் தான் அங்கிருந்து பாங்க்காக் வழியாக இந்தியா திரும்பியதாக ஒப்புக்கொண்டார். நாடு பயணத் தடையை விதித்த பின்னர், பிடிபட்டுத் தடுத்து வைக்கப்படுவார் என்ற அச்சத்தில் தான் சீனாவை விட்டு வெளியேறியதாக அவர் கூறினார்.

அந்த மாணவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை அறியும் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 14 நாட்கள் தனிமையில் வைத்துக் கண்காணிக்கப்டுகிறார்கள்.

டைனிக்  பாஸ்கரின் கூற்றுப்படி,  கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படும் 5 நபர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே வேளையில், பாங்க்காக் வழியாக இந்தியா திரும்பிய 15 பேரில் எஞ்சியுள்ள 9 பேரைக் கண்டுபிடிக்க சுகாதாரத் துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.