டில்லி

தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க மத்திய அரசு அனைத்து அமைச்சகம்  வழங்கும் டைரி மற்றும் கால்ண்டர்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் செலவுக் கணக்கு கேட்டுள்ளது.

மோடியின் மத்திய அரசு தற்போது செலவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  குறிப்பாகத் தேவையற்ற செலவுகள் குறித்த கணக்கெடுக்க பிரதமர் அலுவலக அமைச்சரவைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு வருடமும் பல பரிசுகளை வழங்கி வருகின்றன.

இவற்றில் பல தேவையற்ற செலவுகளாகக் கருதப்படுவதால் பிரதமர் அலுவலக துறை  இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஒவ்வொரு வருடமும் அனைத்து அமைச்சரவை, அமைச்சரவையின் கீழ் இயங்கும் துறைகள் மற்றும் நிறுவனங்கள் செய்யும் செலவுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் அந்த சுற்றறிக்கையில் ஒவ்வொரு வருடமும் அமைச்சகம், துறை மற்றும் நிறுவனங்கள் டைரிகள், காலண்டர்கள் ஆகியவை எவ்வளவுக்கு வாங்கப்பட்டன மற்றும் எத்தனைப் பேருக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறித்துக் கேட்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்கள் அளிக்க கடைசி தேதியாகப் பிப்ரவரி 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.  ஆனால் இது வரை எந்த ஒரு அமைச்சரும் பதில் அளிக்காததால்  இந்த சுற்றறிக்கையைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகி உள்ளது.