பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான சசிகலா உள்ளிட்டோர் அடைக்கப்பட இருக்கும் பரப்பன அக்ரஹாஹா சிறை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக  பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் சரணடைகிறார்கள் .

மாலை 5 மணிக்கு பின்னர் சசிகலா உள்ளிட்டோர் இங்கு சரணடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக காவல்துறை அறிவித்துள்ளது.