சென்னை: 132வது பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், நாளை அம்பேத்கர் சிலைக்கு  முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செய்கிறார் .

பாரத ரத்னா’ டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. அப்பேத்கர் பிறந்த தினத்தை மத்தியஅரசு விடுமுறை தினமாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும், அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, நாளை அவரது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.