தாம்பரம்: தாம்பரம் காவல் சரகத்தில் 13 காவல் ஆய்வாளர்களை மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில்,  தாம்பரம் மாநகரில் பணியாற்றி வந்த 13 காவல் ஆய்வாளர்களை திடீர் பணியிட மாற்றம் செய்து மாநகர ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,   தாம்பரம் ஆய்வாளராக பணியாற்றி வந்த சார்லஸ் தாழம்பூர் காவல் நிலையத்திற்க்கும், சேலையூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஓட்டேரி பகுதிக்கும், ஓட்டேரி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்துள்ளனர்.

தாம்பரம்,சேலையூர், சிட்லபாக்கம், ஓட்டேரி, மணிமங்கலம், குன்றத்தூர், சோமங்கலம், தாழம்பூர், கண்ணகி நகர், கானத்தூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட 13 காவல் நிலையத்தின் ஆய்வாளர்கள்  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 13 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு இருப்பது காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.