இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

Must read

சென்னை:
ன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு 10, 11, 12ம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. 1ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும், தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியாவதாக அரசு தேர்வுத்துறைகள் இயக்கம் அறிவித்து உள்ளது. அதன்படி, தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article