சென்னை, 
மது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்தி உடைய நிர்பயா ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்தது.

சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லிய மாக தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘நிர்பயா’ ஏவுகணை நேற்று ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சுமார் நடந்த ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை அழிக்கும் திறன் கொண்டது.
ஆனால், எதிர்பாராதவிதமாக ‘நிர்பயா’ ஏவுகணை சோதனை யானது தோல்வியில் முடிந்தது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வட்டாரத் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
நேற்றைய சோதனையின் போது ஏவப்பட்ட ஏவுகணையானது நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லாமல் திசைமாறி செல்ல தொடங்கியது. அதன் காரணமாக அந்த ஏவுகணை ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் அழிக்கப்பட்டதாகவும், அதில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 3 தடவை இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு தோல்வியுற்ற நிலையில், சிறு சிறு மாற்றங்களுடன்  தற்போது நான்காவது தடவையாக ஏவப்பட்டது. அதுவும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
‘நிர்பயா’ ஏவுகணையை வான், நிலம், கடல் ஆகிய 3 இடங்களில் இருந்தும் இயக்க முடியும் என்றும், இது போர் விமானம் போலவே  குண்டுகளை வீசும் திறன் உடையது. ரிமோட் மூலம் இயக்கலாம். தேவைப்பட்டால் தாக்குதல் நடத்தாமல், புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் கொண்டு வர முடியும் வகையில் இந்த ஏவுகணை தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.