சேகர் ரெட்டிக்கு உதவிய 'ஹவாலா' மோசடி மன்னன் பராஸ்மல் லோதா கைது!

Must read

 
டில்லி,
மிழக தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்ற உதவியாக இருந்த பிரபல ஹவாலா மோசடி புகார் பரஸ்மல் லோதா இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மணல்குவாரி காண்டிராக்டரும், பிரபல தொழிலதிபருமான சேகர் ரெட்டி வீட்டில் கடந்த வாரம் மத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை திடீரென ரெய்டு நடத்தியது.

சேகர் ரெட்டி                                               ‘ஹவாலா’ பரஸ்மல் லோதா

கடந்த 8ம் தேதி சேகர் ரெட்டியின் வீடு உள்ளிட்ட அவரது அலுவலகங்களில் நடத்தப்பட்ட  வருமான வரித்துறையினர் சோதனையின்போது,  147 கோடி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 33 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன.
மேலும்  கணக்கில் வராத கோடிக்கணக்கான கருப்பு பணத்தை வைத்திருந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இந்தியா முழுவதும் மத்திய அரசு கருப்பு பண முதலைகளை வேட்டையாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேகர் ரெட்டிக்கு பழைய பணத்திற்கு பதிலாக புதிய பணம் மாற்றிகொடுத்து உதவிய மும்பையை சேர்ந்த பிரபல ஹாவாலா புகழ் பரஸ்மல் லோதா இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு அவரிடம் அமலாக்கத்துரை விசாரணை நடத்தி வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் டெல்லியில் உள்ள சாகெட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொழிலதிபர் பரஸ்மல் லோதா மூலம்  ரூ.13 கோடி மாற்றிய டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரான ரோஹித் டாண்டான்  என்பவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article