ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.80 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் 9 லட்சத்தை தாண்டி விட்டது.

இன்று (10ந்தேதி) காலை 7மணி நிலவரப்படி,  உலகம் நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கை 2,80,14,828 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும்,  9,07,304 ஆக உயர்ந்து உள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 2,00,91,717 ஆக அதிரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  9,07,304 ஆக அதிகரித்து உள்ளது.

உலகிலேயே கொரோனா பாதிப்பில் தொடர்ந்து  அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.  அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,549,475 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத் எண்ணிக்கை 195,239 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 3,846,095  பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,508,141 ஆக அதிகரித்து உள்ளது.

2வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது.   இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4,462,965 உள்ளது.  இதுவரை 75,091  பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 3,469,084 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 918,790 ஆக உள்ளது.

3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,199,332 ஆகவும்,  இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 128,653 ஆகவும் உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,453,336  பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 617,343  ஆக உள்ளது.