விசா காலம் முடிந்து சுமார் 1.2 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவில் தங்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2019 ம் ஆண்டு முதல் 2022 மார்ச் மாதம் முடிய 1,19,958 பேர் விசா முடிந்தும் தங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.

2019 ம் ஆண்டு 54,576 ஆக இருந்தது 2020 ம் ஆண்டு 40,239 ஆகவும் 2021 ம் ஆண்டு 25,143 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

2019 க்கு முன்பிருந்து 2021 டிசம்பர் வரை மொத்தம் 3,93,431 பேர் இதுபோல் தங்கி இருப்பதாக கூறினார்.

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளதாக ராய் கூறினார்.

மேலும், வழக்கின் தகுதி அடிப்படையில் இந்தியாவில் இருந்து நாடு கடத்துவது மற்றும் அவர்களின் பெயர்களை கருப்பு பட்டியலில் இடம்பெற செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

விசா முடிந்து சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது குறித்தோ அல்லது எந்த மாநிலத்தில் அதிகம் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரமோ கேட்கவும் குறிப்பிடவும் இல்லை.