சென்னை: தமிழகத்தில்  நேற்று  18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,437 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் கடந்த 2 வாரத்தில் மட்டும்  பாதிப்பு 34 சதவிகிதம் குறைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை  2,81,48,829 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை  22,74,704  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.

நேற்று ஒரேந ளில்  409 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை  27,765 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  31,045  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,28,344  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,18,595  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று 1,437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,19,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  42 பேர் உயிர் இழந்ததையடுத்து,  இதுவரை 7,560 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்  3,843 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,95,305 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 16,709 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகஅரசு மே மாதம் 23ந்தேதி முதல் 15 நாட்கள் தளர்வுகளற்ற பொதுஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெகுவாக தொற்று பரவல் குறைந்தாலும், கோவை உள்பட 11 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அங்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

சென்னையில்  மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு நாளைக்கு 7,500 க்கும் மேற்பட்டோர்ல பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 15 நாட்களில்  COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை  2,000 க்கும் குறைந்துள்ளது. அதாவது, சென்னையில், தினசரி சராசரியாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை 34% குறைந்துள்ளது. இருப்பினும், சரிவு அனைத்து மண்டலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

வடசென்னையைச் சேர்ந்த தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திரு வி கா நகர் ஆகிய 3 மண்டலங்களில் தொற்று பரவல் வீழ்ச்சியை கண்டுள்ளன. நகரத்தில் பதிவான வழக்குகளில் 34% சரிவுக்கு எதிராக, இந்த மூன்று மண்டலங்களில் வழக்குகள் முறையே 8%, 10% மற்றும் 16% மட்டுமே குறைந்துவிட்டன. இந்த மூன்று மண்டலங்களிலும் தினசரி பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மே 25 முதல் 31 வரை 485 ஆக இருந்தது, ஜூன் 1 முதல் 7 வரை இது 429 ஆக குறைந்தது. ஆனால்,  படித்தவர்கள் அதிகம் வசிக்கும்  அண்ணா நகர் மண்டலத்தில்  தினசரி பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த வாரம் கிட்டத்தட்ட 50% குறைந்து 168 ஆக இருந்தது, ஆனால், முந்தைய வாரம் 309 ஆக இருந்தது. தேனாம்பேட்டை, அடையாறு, வளசரவாக்கம், மாதவரம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் தொற்று பரவல்  சராசரியை விட  குறைவாகவே பதிவாகி உள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறைக்கப்படவில்லை. கண்காணிப்பு தொடர்ந்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்கpளல் அதிகமாக  கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளார். மேலும் தொற்று குறித்து, சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், . இது தவிர, தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள் மற்றும் மருந்தகங்களை கோவிட் -19 போன்ற அறிகுறிகளைப் போன்றவர்களைப் பற்றி புகாரளிக்குமாறு கேட்டு கண்காணிப்பை அதிகரித்துள்ளோம், ”என்றார்.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: