hqdefault

 

தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்த படம் குறித்தும் முடிவு செய்துவிட்டார். அந்த புதிய படத்துக்காக பல இயக்குநர்கள் விஜய்யை நாடினர். சமீபத்தில் வெளியான “புலி’ போதுமான வரவேற்பு கிடைக்காததால், தனது அடுத்த படத்தின் கதை மற்றும் இயக்குநரை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த யோசனையுடன் இருந்தார் விஜய். இந்த நிலையில் புதிய படத்துக்கு இயக்குநரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தை, தனது மனைவி சங்கீதாவிடம் ஒப்படைத்திருந்தார்.

இயக்குநர்களிடம் கதை கேட்ட சங்கீதா, அவர்களில் இருந்து எஸ்.ஜே. சூர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதையடுத்து எஸ்.ஜே. சூர்யாவை அழைத்து விஜய்யும் கதை கேட்டார். அவருக்கும் பிடித்துப்போய்விட்டதாம்.

விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.