kamal-chandra-babu-2

மல்ஹாசனுக்கு அரசியல்தான் பிடிக்காதே தவிர, அரசியல்வாதிகள் அனைவரும் நண்பர்கள்தான். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய (!) தேர்தல் கமிசன் தூதுவராக விளங்கினார். தற்போதைய பாஜக அரசில் பிரதமர் மோடியின் தூய்மை தூதுவராக இருக்கிறார்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் சந்திப்பார், சிவசேனை ராஜ் தாக்கரேவுடனும் அளவளாவுவார். (தமிழ்தாம்பா இது!)

இந்த நாகரீக அடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை சந்தித்திருக்கிறார் கமல்.

இது குறித்து அரசியல்வாதி பாணியில் அறிக்கையும் விட்டிருக்கிறார். தான் ஏன் சந்திரபாபுவை சந்தித்ததற்கான காரணத்தையும்  அதில் சொல்லியிருக்கிறார் கமல்.

“தூங்காவனம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சீக்கட்டி ராஜ்யம்’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாகத்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை சந்திக்கச் சென்றேன். சிறப்புகாட்சியில் கலந்துகொள்ள அவரையும் அழைத்தேன்” என்று  அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

“அது சரி.. அவரென்ன கருணாநிதியா.. முதல்வராக இருக்கும்போதும் சினிமாக்கள் பார்க்க..” என்று கிண்டலடிக்கிறார்கள் ஆந்திர பத்திரிகையாளர்கள்.