கமதாபாத்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேலின் ஆசியை பெற்றார்

குஜராத் மாநில பா ஜ க முதல்வராக பதவி வகித்தவர் கேஷுபாய் படேல்.  அவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மோடி முதல்வராகும் வரை அந்தப் பதவியில் இருந்தார்.   பிறகு அவருடைய பதவி மோடிக்கு அளிக்கப் பட்டது.   கேஷுபாய் பா ஜ க வை விட்டு விலகி குஜராத் பரிவர்த்தன் என்னும் புதிய கட்சியை தொடங்கினார்.  பாஜகவுக்கு எதிராக 2012 சட்டசபை தேர்தலில் அந்தக் கட்சி போட்டி இட்டது.

அதன் பின் அவர் அந்த கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பா ஜ க வில் இணைந்தார்.  கேஷுபாய் படேலின் மகன் பிரவின் படேல் (வயது 60) செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.  புல்லட் ரெயில் துவக்க விழாவுக்கு வந்த போது மோடி அவரை சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்தார்.

ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட உள்ள தற்போதைய முதல்வர் விஜய் ரூபானி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்யும் முன் கேஷுபாயின் இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.  அப்போது முதல்வர், “கேஷுபாய் எங்கள் கட்சியின் முது பெரும் உறுப்பினர்.  கட்சிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவ்ர்.  அதனால் நான் வேட்புமனு தாக்கல் செய்யும் முன் அவருடைய ஆசியைப் பெற விரும்பினேன்.” எனக் கூறி உள்ளார்.