லக்னோ:

உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளிக்குள் கால்நடைகளை அடைத்து வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் மாவட்டம் பாடிவர் கிராமத்தில் ஆரம்ப பள்ளி செயல்பட்டுகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திங்களன்று பள்ளிக்கு வந்தபோது, பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகளை வைத்துப் பூட்டிய விவசாயிகள், மாணவர்களை வெளியே உட்கார வைத்திருந்தனர். வெளியே அமர்ந்திருந்த விவசாயிகள் கையில் கம்பு போன்ற ஆயுதங்களை  வைத்திருந்தனர்.

மாணவர்கள் குளிரில் நடுங்கியபடி வெளியே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். விவசாயிகளிடம் தலைமை ஆசிரியர் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. இதன் பின்னர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பயிர்களை கால்நடைகள் அழிக்கின்றன. இதுகுறித்து தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியின்றிதான் அந்த மாடுகளை பள்ளி வளாகத்துக்குள் அடைத்து எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம் என்றனர்.
விரைந்து வந்த பாரா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், பயிர்களை கால்நடைகள் மேய்ந்து விடுவதால், பெரும் இழப்பு ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டி விவசாயிகள் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய பின், பிற்பகல் 1.30 மணி அளவில் கால்நடைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டன. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்துள்ளோம் என்றார்.

இதற்கிடையே, கால்நடைகளை பள்ளிக்குள் அடைத்து, பள்ளிக்கு இடையூறு செய்த விவசாயிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் சுஹாஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே, பயிர்களை கால்நடைகள் மேய்வதைத் தடுக்கும் வகையில், அத்தகைய மாடுகளை வரும் 10-ம் தேதிக்குள் மாடுகள் காப்பகத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளை முதல்வர் யோகி ஆதித்யானந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.