டில்லி

டகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 11 மற்றும் 12

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு தனிப்பட்ட பேட்டியில் மட்டும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதை ஒட்டி ஊடகக்கள் அவருக்கு 15 கேள்விகள் எழுப்பி இருந்தன.

அந்த வரிசையில் இன்று 11 மற்றும் 12 ஆம் கேள்விகள் இதோ :

11. நீங்களும் உங்கள் கட்சி தலைவர்க்ளும் விஞ்ஞானத்துக்கு எதிராக பல கருத்துக்கள் சொல்லி வருவதாக பல விஞ்ஞானிகள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் இந்திய சமுதாயத்தின் விஞ்ஞான அறிவை உலகம் குறை கூறுவதாக பலரும் பேசி வருகின்றனர். ஆனால் உங்கள் அரசு விஞ்ஞான மேம்பாட்டுக்கு செலவழிப்பதை விட கோமிய ஆராய்ச்சி போன்றவைகளுக்கு அதிகம் செலவு செய்கிறது. இது போன்ற அரசு நிதி உதவியுடன் நடக்கும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் குறித்து எவ்வித அறிவு பூர்வமான தகவலும் வெளிவராமல் உள்ளது. நமது விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற வேண்டும் என நீங்கள் கூறி வருகிறீர்கள். விஞ்ஞான வளர்ச்சிகளுக்காக நாட்டின் மொத்த உற்பத்தி தொகையில் 0.7% செலவிடப்படுகிறது. ஆனால் சமீபத்திய அர்சின் நிதி நிலை அறிக்கையில் 13% வேறு ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேற்றுமை குறித்து விளக்க முடியுமா?

12. உங்கள் அரசு வெளிப்படை தன்மையை ஊக்குவிப்பதாக கூறப்படும் அதே நேரத்தில் தகவல் அறியும் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தங்க்ளால் அரசின் பல துறைகள் இந்த சட்டத்தின் கீழ் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் வெளிப்படை தன்மை மிகவும் குறையும் அபாயம் உள்ளது. மற்றும் இதனால் மத்திய தகவல் மையம் பலவீனம் அடைந்துள்ளது. இவ்வாறு உங்கள் சொல்லுக்கு செயலுக்கும் இடையில் இத்தனை வேறுபாடுகள் ஏன் உள்ளன ? அதே போல லோக் பால் அமைக்காமல் இருக்க உண்மையான காரணம் என்ன? அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் என ஒருவர் இல்லாததால் இந்த லோக் பால் அமைப்பதில் வெளிப்படை தன்மை இருக்காது என நீங்கள் கூறி வருகிறீர்கள். அது உண்மை எனில் நீங்கள் ஏற்கனவே தகவல் அறியும் சட்டத்தில் திருத்தம் செய்தது போல் இதிலும் ஏன் திருத்ஹ்டம் செய்யவில்லை?

அடுத்த கேள்விகளை நாளை காண்போம்.