1ளை..  14/4/2016-   வியாழக்கிழமை  அன்று தமிழ்ப்புத்தாண்டான “துர்முகி” பிறக்கிறது. இந்த  பெயரைப் பார்த்ததும் பலருக்கு,  இந்த ஆண்டில் துர்ச்சம்பவங்கள் அதிகம் நடக்குமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது.
இது தேவையில்லாத அச்சம்.
“துர்முக” என்றால் குதிரை என்று பொருள்.  இந்க துர்முகி  ஆண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுகிறார்  கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின் அதிதேவதை  ஸ்ரீஹயக்ரீவர். ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான். இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஶ்ஸ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்டப்போகிறது.
ஆகையால் ஸ்ரீஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு “துர்முகி” என்று பெயர். ளது. அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஶ்ரீஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாக இந்த ஆண்டு திகழும். இதை சூட்சமமாக உணர்த்துகிறது துர்முகி என்ற பெயர்.
இந்த துர்முகியால் நம் துயர்கள் களையப்படும்.
ஆகவே, துர்முகி ஆண்டை  இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்வோடு வரவேற்போம்!
– ஹிரிஹரன்