1
சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்.
சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]
விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]
அனுசம் = ஆனி
பூராடம் – பூராடி = ஆடி
சிரவணம் – ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]
பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]
அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]
கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]
மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி
பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]
மகம் – வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]
உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].
எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.
ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை மாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுகிறோம்.