சென்னை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”இன்று தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேட்டுக்குச் சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்,மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல் மதுரை , தென்காசி, திருநெல்வேலி, குமரி, கரூர், திருச்சி மாவடங்களில் கன முதல் மிகக் கன மழை பெய்யும்

மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால்  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.     சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.  ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம்”

என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தமிழகம் முழுவதும் 11276. 62 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் போர்க்கால அடிப்படையுல் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 690.07 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 4,227 மழை நீர் வடிகால்கள் தூர் வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறையால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 677  பாலங்கள், சிறு பாலங்கள் அடியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீனவர்களுக்குப் பேரிடர் காலங்களில் முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தெரிவிக்க 21 ஆயிரத்து உயர் VHF கருவிகளும், 600 செயற்கைக்கோள் தொலைப்பேசிகளும், 296 நேவிகேசன் உபகரணங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது

மேலும் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகட்டுப்பாட்டு மையமும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் தொடர்பு கொள்ள  1070 மற்றும் 1077 என்று இலவச தொலைபேசி எண்ணும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் வசதியும் செய்துள்ளது.