ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அளித்த ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாகிஸ்தான் அரசு ரகசியங்களை வெளியிட்டதாகப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு  ‘சைபர்'(Cipher) வழக்கு என அழைக்கப்படுகிறது.  இந்த வழக்கின் விசாரணை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   இம்ரான்கானுக்கு ஏற்கனவே ‘தோஷகானா’ வழக்கில்  3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், ‘சைபர்’ வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு இம்ரான்கான் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இம்ரான்கானின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.