லக்னோ

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இன்று லக்னோவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29- ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதுவரை இவ்விரு அணிகளும் ஒரு நாள் போட்டியில் 106 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இவற்றில் 5 முறை இந்தியாவும், 44 முறை இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டம் டையில் முடிந்து 3 ஆட்டம் முடிவில்லாமல் போனது.

இதுவரை இந்த உலகக் கோப்பையில் லக்னோவில் நடந்த போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த அணி 2 முறை வெற்றி பெற்று  முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது., அதிகபட்சமாக 311 ரன்கள் எடுக்கப்பட்டு குறைந்தபட்சமாக 177 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்),  சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்துபேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்),  ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அட்கின்சன், அடில் ரஷித்.