வேதாளத்தால்  தூங்காவனத்துக்கு சிக்கல்?

Must read

Untitled-10

ஜீத்தின் ‘வேதாளம்’  படத்தை தீபாவளிக்கு  சில  தினங்கள் முன்பே வெளியிட திட்டமிட்டமிட்டார்கள்.  படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகளால் தீபாவளி அன்றே வெளியாகும் என்பதே தற்போதைய நிலை.

இப்போது விசயம் அதுவல்ல. அஜீத்தின் வேதாளத்தால், கமலின் தூங்காவனம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கறது. அந்த படமும் தீபாவளி ரிலீஸ்தான்.

‘வேதாளம்’ படத்தை ஆளும் தரப்பின்  ‘ஜாஸ்’ நிறுவனம் தமிழ்நாடு முழுக்க வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. ஆகவே, தமிழகம் முழுதும் முக்கியமான பெரிய தியேட்டர்களை புக் செய்துவிட்டார்கள்.  தூங்காவனம் படத்துக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காத நிலை.  இதனால் கமல் வருத்தத்தில்  இருக்கிறாராம்.

“எந்த நாட்டுல நல்ல தியேட்டர் கிடைக்குதோ அங்க போயிடறேன்..” என்று புலம்பாமல் இருந்தால் சரி. ஏன்னா, உலக நாயகன் வருத்தப்பட்டா நமக்கு தாங்காதே!

More articles

Latest article