📡ரிசர்வ் வங்கியில் 182 கிரேடு ‘பி’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 182
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Officer (Grade ‘B’) (General DR) – 163
பணி: Officer (Grade ‘B’) (Economic and Policy Research Department) – 11
பணி: Officer (Grade ‘B’) (Department of Statistics and Information Management) – 8
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
📡மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க பிச்சை எடுக்கலாம், கூலி வேலை பார்க்கலாம்.. ஹைகோர்ட் அதிரடி!
மதுரை: மனைவி, குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க ரோட்டில் போய் பிச்சை எடுக்கலாம். கூலி வேலை பார்த்து சம்பாதிக்கலாம். அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்க மட்டும் முயலக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக கூறியுள்ளது.
📡குப்பைத் தொட்டியில் மேயும் குதிரைகள்
கோவை: பந்தயங்களில் ஓடி ஓடி உரிமையாளர்களுக்கு கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து கொடுத்த பந்தய குதிரைகள் தற்போது பராமரிக்க யாரும் இல்லாமல் பசிக்கு உண்பதற்கு உணவும் இல்லாமல் அனாதைகளைப் போல் சுற்றித் திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் போத்தனூர் டி3 காவல் நிலையம் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் உள்ள உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது
📡பெரியாறு அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை: பெரியாறு அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதை கருத்தில் கொண்டு. தண்ணீர் திறந்துவிட ஆணை பிறப்பிக்கப்பட்டது
📡ஆடி அமாவாசை,18ம் பெருக்கு, குருபெயர்ச்சி – ஆகஸ்ட் 2ம் தேதி ஒரே நாளில் 3 முக்கிய விசேஷங்கள்
📡 இந்த தீ விபத்தால் துணிக்கடையில் உள்ள ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
📡கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
📡சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் ஸ்ரீவில்லிபுத்தூர் நிதிமன்றத்தில் ஆஜர்
விருதுநகர்: சிலைகடத்தல் மன்னன் தீனதயாளன் ஸ்ரீவில்லிபுத்தூர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பழுவூரில் 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கில் தீனதயாளனை போலீஸ் ஆஜர்படுத்தியது. நெல்லை நாரம்பூநாதர் கோயிலில் 2005-ல் 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பேரில் தீனதயாளனும் ஒருவர் ஆவார்.
📡பிளிப்கார்ட் பிளாஷ் விற்பனை அதிரடி கிளப்பிய புதிய நிறுவனம்!!
லீ இகோ நிறுவனத்தின் லீ 2 சூப்பர் போன் கருவிக்கான மூன்றாவது பிளாஷ் விற்பனை நேற்று நடைபெற்றது. பிளாஷ் விற்பனையைத் தொடர்ந்து லீ 2 கருவிகளுக்கான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களின் மதிப்பீடு 4.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது மற்ற கருவிகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமான பிளாஷ் விற்பனையைத் தொடர்ந்து லீ 1 கருவிக்கான அடுத்தப் பிளாஷ் விற்பனை ஜூலை 14 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியினை முந்தைய கருவிகளைப் போன்றே லீ மால் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். லீ இகோ நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை சூப்பர்போன்கள் வித்தியாசமான வடிவமைபர்பு, குறைந்த விலை மற்றும் கவர்ந்திழுக்கும் அம்சங்களால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
📡65 ஆண்டாக பேருந்து வசதி இல்லை சிவபுரம் கிராம மக்கள் கடும் அவதி
சங்கராபுரம் : விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக உள்ளது சங்கராபுரம் தாலுகா. கடந்த 2008ல் சங்கராபுரத்துக்கு புதிய போக்குவரத்து பணிமனை 33 பேருந்துகளை கொண்டு திறக்கப்பட்டது. ஆனால் சங்கராபுரம் அடுத்த கிடங்கன்பாண்டலம், ராஜபாண்டலம், மூக்கனூர், கிடங்குடையாம்பட்டு, சிவபுரம் ஆகிய கிராமங்களுக்கு இது நாள் வரையில் பேருந்து வசதிகள் இல்லாததால் அக்கிராமத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் தேவபாண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் பேருந்து வசதிகள் இல்லாததால் காலை மாலை என இரு நேரங்களிலும் பள்ளி மாணவர்கள், நடந்தே செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. மேலும் மாலை நேரத்தில் எந்த பேருந்தும் அந்த சாலையில் பேருந்து வசதிகள் கிடையாது.
📡பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்
புதுச்சேரி: புதுவையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 2612 பேருக்கும் மீண்டும் வேலை வழங்கக் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
📡உயர்நீதிமன்றத்துக்குள் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் மக்கள்.  எந்த வழக்குக்காக வருகின்றனர் என்பதை விசாரித்து அறிந்த பிறகே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.  உயர்நீதிமன்றத்திற்குள் நேற்று வக்கீல் மணிமாறம் வெட்டப்பட்டதை அடுத்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
📡சென்னை முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட புகையிலைப்  பொருட்கள் விற்பனை குறித்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெட்டிக்கடை முதல் மளிகைக்கடை, பல்பொருள் அங்காடி உள்ளிட்ட  இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
📡சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நோக்கி சென்ற மக்கள் நலப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  13,500 பேருக்கும் மீண்டும் பணி வழங்கக் கோரி மனு அளிக்க சென்றவர்கள் போலீசார் கைது செய்தனர். மேலும் மக்கள் நலப் பணியாளர் வழக்கில்  தமிழக அரசின் மேல்முறையீட்டை திரும்பப் பெற்வும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
📡கிருஷ்ணகிரி அருகே வீட்டில் 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே செக்கானப்பட்டி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  கிருஷ்ணமூர்த்தி ன்பவர் வீட்டில் ஆந்திர போலீசார் நடத்திய சோதனையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
📡ரூ.500 கோடி முறைகேடு செய்துள்ளதாக விஜயகாந்த் மீது குற்றச்சாட்டு.ரூ500 கோடி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் வழக்கு தொடரப்படும் – மக்கள் தேமுதிக நிர்வாகி எஸ்.ஆர்.பார்த்திபன்.
📡தனது வாழ்க்கையை படமாக எடுத்து விட்டு அதற்கான ராயல்டியை தர மறுப்பதாக, நடிகர் சல்மான் கான் மீது சபீர் என்பவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
📡அடையாறு ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
ஆலந்தூர், : கிண்டி ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில், நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, எஸ்ஐ சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, சடலத்தின் கழுத்தில் அறுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
📡தமிழகத்தில் வக்கீல்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வக்கீல் ஜிஎஸ்.மணி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
📡தமிழ்நாடு காவல்துறை சங்கத்துக்கு அங்கிகாரம் கோரி காவலர் செந்தில்குமார் தொடர்ந்த மனுவினை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதி
📡வேலூர் மாவட்டத்தில் மீட்டர், ஸ்பீடு வட்டி என அறிவித்து ஏழைகளின் உயிரை உறிஞ்சும் கந்துவட்டி கும்பல்
📡பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வருமான வரித்துறை, வரி ஏய்ப்பை கண்டுபிடித்து கூறினால் 50000 பரிசு தருவதாக அறிவித்துள்ளது.
📡மந்திரிகளின் ராஜினாமா பின்னணி இதுதான்!
நஜ்மா ஹெப்துல்லா, சித்தேஸ்வரா ஆகியோர் தங்கள் மத்திய அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். இவர்கள் சிறப்பாக செயல்படாததால் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போதே சித்தேஸ்வராவின் பதவி பறிக்கப்பட இருந்தது. தனது பிறந்தநாளை காரணம் காட்டி தப்பித்தாராம் அவர்
📡சாலை விபத்தில் அரசு ஊழியர் பலி
சென்னை, : வண்ணாரப்பேட்டை ரயில்வே காலனியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (42), பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
📡எமிரேட்ஸில் கைதான மீனவர்கள் தமிழகம் வந்தனர்
அரபு எமிரேட்ஸ், அஜ்மானில் கைது செய்யப்பட்ட குமரி, துாத்துக்குடி மீனவர்கள் 11 பேர் மீட்கப்பட்டு தமிழகம் திரும்பினர். 11 பேரும் விமானம் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து சென்னை வந்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் மீனவர்களை வரவேற்றனர்
📡டாப் ட்ரெண்டிங்கில் தமிழ்நாடுகாவல்துறை.
திருவண்ணாமலை மாவட்ட தம்பதிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோ பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிகிறது. #தமிழ்நாடு_காவல்துறை என்ற ஹேஷ்டேக்கில் டிவிட்டரிலும் கோபத்தைக் கொட்ட, தமிழக அளவில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது தமிழ்நாடு காவல்துறை
 
 
📡விரைவில் வருகிறது சானியாவின் சுயசரிதை!.
சானியா மிர்சாவின் சுயசரிதையான ‘ Ace Against Odds’ என்னும் புத்தகம் விரைவில் உங்கள் கைகளுக்கு வரவிருக்கிறது. நாளை ஷாருக்கான் இதனை மும்பையில் அறிமுகம் செய்யலாம் எனத் தெரிகிறது. வாழ்வில்  சந்தித்த சவால்கள், சறுக்கல்கள், விளையாட்டில் இதுவரை வென்ற மகுடங்கள் என அனைத்தையும் இதில் சானியா பேசியிருக்கிறார்
📡பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
பெரியாறு அணையில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பாசன  வசதி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
📡கனடாவில் கபாலிக்கு ரெட் கார்ட்…
ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள கபாலி திரைப்படம், வரும் 22ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி படம், கனடா நாட்டின் கிரேட்டர் டொரன்டோ பகுதியில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. அங்கு ரசிகர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிரேட்டர் டொரன்டோ பகுதியில் உள்ள தியேட்டர்களில் கபாலி படம் திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது…. இதனால் அப்பகுதி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்….
📡சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க  அனுமதி கோரி போலீசார் மனு.
📡உயர்நீதிமன்றத்தில் வழக்கிறஞர் மணிமாறனை வெட்டிய அவரது மகன் ராஜேஷை ஜார்ஜ் டவுன்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
📡அரபு எமிரேட்ஸ், அஜ்மானில் கைது செய்யப்பட்ட குமரி, துாத்துக்குடி மீனவர்கள் 11 பேர் மீட்கப்பட்டு தமிழகம் திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் மீனவர்களை வரவேற்றனர்.
📡மருத்துவ நுழைவுத் தேர்வை (NEET) தள்ளிவைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் அனில் ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி நாகேஸ்வர ராவ், மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே ஆஜராகியிருப்பதால் இந்த வழக்கிலிருந்து விலகியுள்ளார்.
📡திருவண்ணாமலையில்  நடு வீதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேரை போலீசார்  தாக்கியதை கண்டித்து  செங்கத்தில் ஆட்டோக்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்.
📡2011ல் தேர்தல் விதிமீறல் வழக்கில் பண்ரூட்டி நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆஜர்.
📡திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே மயில் மோதியதால் பைக் நிலை தடுமாறி விழுந்ததில் மதுரையில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்த ரூபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
📡பழனி பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐக்கு மது பாட்டிலில் குத்தியதில்  உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
📡கரூரில் ஆயுதபடை காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி.
📡பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூட உள்ளது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னை, நிலுவையில் உள்ள பல முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அலுவலகத்திற்கு வருமாறு அமைச்சர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
📡சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2,935-க்கும், ஒரு சவரன் ரூ.23,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.52.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.49,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.