நாய்கள் கடித்து போலீஸ் கமி‌ஷனர்  அலுவலக ஊழியர் பலி

Must read

அரக்கோணம்:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை செய்து வந்த கிருபாகரன், தான் வளர்த்து வந்த நாய்களால் கடித்து குதறி கொல்லப்பட்டார்.
நாய் நன்றி உள்ளது என்று சொல்வதுண்டு. எத்தனையோ நாய்கள் தங்கள் உயிரை கொடுத்து எஜமானரை காப்பாற்றி உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால்  போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த கிருபாகரன் என்ற ஊழியர் அரக்கோணம் அருகே  உள்ள காட்டுப்பாக்கம் என்ற ஊரைச்  சேர்ந்தவர்.  இங்கு இவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. தோப்பை பாதுகாக்க 2 பெரிய நாய்களை வளர்த்து வந்துள்ளளார்.
நாய்களுக்கு தினந்தோறும் இரவு 8 மணிகெல்லாம் மாட்டிறைச்சி உணவு கொடுப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு நாய்களுக்கு உணவு போட தாமதமாகி உள்ளது. இதனால் நாய்கள் இரண்டும் பசியில் இருந்துள்ளது.
dangerous-dogs-021          நாயின் ஆக்ரோஷமான கோபத்தை கவனிக்காத கிருபாகரன் எப்போதும்போல்  உணவு போட, பசியில் இருந்த நாய்கள்   கிருபாகரன்மீது பாய்ந்து கடித்து, குதறிவிட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கிருபாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தோப்புக்கு சென்ற கிருபாகரன் வீடு திரும்பாததால் இரவு 11 மணி அளவில் அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பிணமாக அவர் கிடப்பதை கண்டு அழுது துடித்தனர்.  நாய்களின் உடல் மற்றும் வாய் பகுதிகளில் ரத்தக்கறைகள் காணப்பட்டது.
இதுகுறித்து கிருபாகரன்ன குடும்பத்தினர் பானாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்  தெரிவித்தனர். போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More articles

Latest article